சினிமா

அத்திவரதரை காண சென்ற நயன்தாரா,ஐயர் செய்த காரியத்தால் பரபரப்பு -புகைப்படம் உள்ளே!

Summary:

athivarathar nayanthara

 காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். 

அந்தவகையில் சயன கோலம் முடிந்து,  நின்ற கோலம் கடந்த 1-ஆம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து  ஆகஸ்டு 16 வரை மக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். பின்னர் 17 ம் தேதி ஆக்கிரம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டு, 18 ம் தேதி குளத்தில் வைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அத்திவரத்தரை காண சென்றுள்ளார் நடிகை நயன்தாரா. அவருடன் அவருடைய காதலரும் சென்றுள்ளார்.அப்போது நயன்தாரவை அங்கு உள்ள ஐயர் ஒருவர் போட்டோ எடுப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அப்புகைப்படத்தை பார்த்த அனைவரும் அந்த ஐயரை திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும் அதற்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.


Advertisement