சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த சின்னத்திரை பிரபலம்.. வருத்தத்தில் நெஞ்சுருக வாழ்த்தும் ரசிகர்கள்.!

சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த சின்னத்திரை பிரபலம்.. வருத்தத்தில் நெஞ்சுருக வாழ்த்தும் ரசிகர்கள்.!


athithya-anchor-married-a-police-officer

பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினி தனக்கு திருமணம் முடிந்துள்ளதாக கூறியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கோலிவுட்டில் நகைச்சுவைக்கு பெயர்போன ஆதித்யா டிவியில் தொகுப்பாளினி மற்றும் சீரியல் நடிகையாக வலம்வரும் அகல்யா வெங்கடேஷ் தனக்கு திருமணமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதால் தனி ரசிகர் பட்டாளமே இவர் பின் உள்ள நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி என்ற சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.

இதனையடுத்து சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சில முக்கிய வேடங்களில் அகல்யா நடித்த நிலையில், ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசியில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

cinema

இந்த நிலையில் திடீரென அகல்யா தனக்கு திருமணம் முடிந்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், தனது கணவர் தமிழக காவல்துறையில் துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் அருண்குமார் என்பதும், தங்களுக்கு திருவண்ணாமலையில் திருமணம் நடந்தது என்றும் வெளியிட்டுள்ளார்.

இந்த திருமண புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வரும் 8ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நடைபெறும் என்று அகல்யா தெரிவித்துள்ளார்.