ஆத்தாடி.. வெளியான 3 நாட்களில் அதர்வாவின் குருதி ஆட்டம் செம்ம வசூல்..! எவ்வளவு தெரியுமா?.!!

கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் அதர்வா முரளி. இவர் நடிகர் முரளியின் மகன் என்ற ஒரு அடையாளத்தில் நுழைந்தாலும், தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது இவர் கதைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார். இந்த நிலையில், அவரது நடிப்பில் சில நாட்களுக்கு முன்னதாக வெளியான திரைப்படம் குருதி ஆட்டம். இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை பிரியாபவானி சங்கர் நடித்துள்ளார்.
இப்படம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியான நிலையில், படம் வெளியான மூன்று நாட்களிலேயே நல்ல வசூலை பெற்றுள்ளது. இதுவரையிலும் படம் மொத்தமாக ரூ.4 கோடி வரையிலும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.