வாவ்.. எவ்ளோ நாள் கனவு! அஸ்வினுக்கு அடித்த அடுத்த அதிர்ஷ்டம்! கூட இந்த கோமாளியும் இருக்காரா! அப்போ வேற லெவல்தான்!!

வாவ்.. எவ்ளோ நாள் கனவு! அஸ்வினுக்கு அடித்த அடுத்த அதிர்ஷ்டம்! கூட இந்த கோமாளியும் இருக்காரா! அப்போ வேற லெவல்தான்!!



aswin-sign-in-one-movie-as-hero

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மூன்றாவது இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அஸ்வின். செம ஹேண்ட்சமாக, விதவிதமாக சமைத்து அசத்திய அஸ்வினுக்கு இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

அதிலும் அஸ்வின் கோமாளிகளான ஷிவாங்கி, புகழுடன் செய்யும் அட்ராசிட்டிகள் வேற லெவல். அஸ்வின் இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்து இருந்தார். மேலும் சில விளம்பரங்கள், குறும்படங்களிலும் நடித்திருந்தார். 
இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன்2 முடிந்தநிலையில் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியான அறிவிப்புடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், எனது பல நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளது. அதாவது ஹீரோவாக நான் முதல் படத்துக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளேன். இந்த படம் நல்லபடியாக உருவாகி உங்களை மகிழ்விக்கும். அதுமட்டுமின்றி இப்படத்தில் நான் விரும்பும் ஒருவரும், நீங்கள் அனைவரும் விரும்பும் புகழும் உள்ளார். நாங்கள் இருவரும் ஒரு ஹீரோ, காமெடியனாக உங்களை கண்டிப்பாக மகிழ்விப்போம்.  தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள் என்று கூறியுள்ளார்.