சினிமா

திருமணத்திற்கு பிறகு நடிகை சாயிஷா எப்படி மாறிட்டாங்க தெரியுமா? வைரல் புகைப்படம்!

Summary:

Arya shaieesha after marriage life

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான வனமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா. முதல் படமே இவருக்கு புகழை தேடி தந்தது. அதன்பின்னர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார் சாயிஷா. நடிகர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தார்.

அந்த சமயம் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து தாங்கள் திருமணம் செய்துகொள்ள போவதாக ஆர்யாவும், சாயிஷாவும் டிவிட்டரில் தெரிவித்தனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு இவர்களது திருமணம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

https://cdn.tamilspark.com/media/18108tk4-maxresdefault.jpg

மேலும் சமீபத்தில் கூட ஹனிமூன் சென்ற இந்த தம்பதியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் சாயிஷா கழுத்தில் மஞ்சள் கயிறு தாலியுடன் வலம்வரும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் ஏதாவது படத்திற்காக எடுக்கப்பட்டதா அல்லது திருமணத்திற்கு பிறகு சாயிஷா உண்மையாகவே இப்படி மாறிவிட்டாரா என்பது தெரியவில்லை.


Advertisement