சினிமா

நடிகர் ஆர்யா திருமணம்! அழகிய ஜோடியின் திருமண புகைப்படம் வெளியானது!

Summary:

Arya sayesha wedding photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவின் திருமணம் எப்போது என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்நிலையில்தான் எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சி மூலம் பெண் தேடுவதாகவும், அதில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசியில் தேர்வான மூன்று பேரில் ஒருவரையும் ஆர்யா திருமணம் செய்யவில்லை.

இந்நிலையில்தான் பிரபல நடிகை சாயிஷாவை ஆர்யா காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதுகுறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தங்களது திருமணத்தை இருவரும் உறுதி செய்தனர்.

அதன்படி நேற்று (மார்ச் 9) ஹைதராபாத்தில் ஆர்யா, சாயிஷா திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றுமுடிந்தது. அதிகப்படியான பிரபலங்கள் யாரும் கலந்துகொள்ளாவிட்டாலும் முக்கியமான பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்யாவின் திருமணம் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது.

பள பள உடையில் ஆர்யாவும், சாயிஷாவும் மின்னும் அந்த அழகிய திருமணம் புகைப்படங்கள் இதோ. 


Advertisement