அந்த மனசு எவ்வளவு வலிச்சிருக்கும் அவருக்கு!! இறந்த மனைவியின் முகத்தைப் இறுதியாக பார்க்க பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜ்!!



Arun raja kamaraj wife sindhuja passed away for corona

இறந்துபோன தனது மனைவியின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க பிபிஇ கிட்டுடன் வந்த அருண்ராஜா காமராஜின் புகைப்படம் பார்ப்போரை கண்கலங்கவைத்துள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவான ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அருண்ராஜா காமராஜ். இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் நடித்த கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி, அதை பாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

இதனை அடுத்து ஒருசில படங்களில் துணை இயக்குனராக பணிபுரிந்த இவர், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் ஆகியோரை வைத்து கனா என்ற படத்தை இயக்கி அதில் மாபெரும் வெற்றியும் பெற்றார். இந்தியில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ’ஆர்டிக்கிள் 15’ என்ற படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்து வருகிறார் அருண்ராஜா.

Arun Raja

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இந்நிலையில் அருண்ராஜா காமராஜும் அவரது மனைவி சிந்துஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்று சிந்துஜா இன்று அதிகாலை காலமானார். இவரது மரணம் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இது ஒருபுறம் இருக்க, கொரோனாவால் இறந்த தனது மனைவியின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க ஆசைப்பட்ட அருண்ராஜா, பிபிஇ கிட் அணிந்துகொண்டு தனது மனைவியின் முகத்தை கடைசியாகப் பார்க்க வந்திருக்கிறார்.

அவரது அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி, பார்ப்போரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.