திருச்சியில் அதிர்ச்சி... 17 வயது சிறுமி கர்ப்பம்.!! கல்லூரி மாணவர் கைது.!!



arrested-college-student-pregnant-minor-girl

திருச்சியில் 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியை சேர்ந்தவர் ஹரி. 25 வயதான இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் ஹரி, 17 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்திருக்கிறார். மேலும் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

tamilnadu

இதனைத் தொடர்ந்து சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 45 நாட்கள் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக சிறுமியிடம் விசாரித்ததில் 25 வயது கல்லூரி மாணவரை காதலிப்பதாகவும் அவருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததையும் கூறியிருக்கிறார். இது பெற்றோரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இதையும் படிங்க: அட கொடுமையே... +2 மாணவிக்கு பாலியல் டார்ச்சர்.!! கணக்கு டீச்சர் கைது.!!

இதனையடுத்து கல்லூரி மாணவருக்கு எதிராக திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க: சிறுமி கர்ப்பம்... மது போதையில் தந்தை செய்த கொடூரம்.!!