13 வருட காதல்.! நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளுக்கு திருமணம்.! மாப்பிள்ளை யார் பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என பெருமையாக அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். 90ஸ் கிட்ஸ் மட்டுமல்லாமல் தற்போது வரை ரசிகர்களின் பேவரைட் நாயகனாக இருக்கும் அவர் நடிப்பு அதுமட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கி வருகிறார். நடிகர் அர்ஜுனின் மனைவி நிவேதிகா.
ஐஸ்வர்யா திருமணம்
இவர்களுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இது மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்து யானை என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். பின்னர் சில படங்களில் நடித்துள்ள அவர் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: நான் பொண்ணா பிறந்திருந்தா கமலைதான் கல்யாணம் பண்ணிருப்பேன்.! ஓப்பனாக உடைத்த பிரபல முன்னணி நடிகர்.!
காதலருடன் இரண்டாவது மகள்
அர்ஜுனின் இரண்டாவது மகள் அஞ்சனா. சினிமாவில் ஆர்வம் அல்லாத அவர் ஹேண்ட் பேக் செய்யும் நிறுவனம் ஒன்றை 2023 ஆம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறாராம். இந்நிலையில் அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, "கடந்த 13 ஆண்டுகளாக காதலித்து வந்த காதலரின், திருமண புரபோசலை ஏற்றுக் கொண்டேன்" எனக் கூறியுள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விஜய் டிவி பிரியங்காவிற்கு திடீரென முடிந்த இரண்டாவது திருமணம்.! மாப்பிள்ளை இவர்தான்.. அவரே வெளியிட்ட பதிவு.!