நான் பொண்ணா பிறந்திருந்தா கமலைதான் கல்யாணம் பண்ணிருப்பேன்.! ஓப்பனாக உடைத்த பிரபல முன்னணி நடிகர்.!



Actor sivaraj kumar talk about kamal

கன்னட சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் சிவராஜ் குமார். இவர் தமிழில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

டிரைலர் வெளியீட்டு விழா

நடிகர் சிவராஜ் குமார் மற்றும் உபேந்திரா நடிப்பில், இயக்குநர் அருண் ஜன்யா இயக்கத்தில் உருவாகும் '45' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றுள்ளது. அப்பொழுது பேசிய நடிகர் சிவராஜ் குமார், சென்னைக்கு வரும் போதெல்லாம் எனக்கு ரொம்பவே சந்தோசமாக இருக்கும். நான் சென்னையில்தான் பிறந்தேன். இங்குதான் பள்ளி, கல்லூரி எல்லாம் படித்தேன் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் டிவி பிரியங்காவிற்கு திடீரென முடிந்த இரண்டாவது திருமணம்.! மாப்பிள்ளை இவர்தான்.. அவரே வெளியிட்ட பதிவு.!

kamal

கமலை திருமணம் செய்திருப்பேன்

தொடர்ந்து பேசிய அவர், எனக்கு கமல்ஹாசன் என்றால் மிகவும் பிடிக்கும். கமல்ஹாசன் அழகன். நான் பெண்ணாக பிறந்திருந்தால் அவரைதான் திருமணம் செய்து இருப்பேன். அந்த அளவிற்கு நான் அவரது தீவிர ரசிகன். கமல் வீட்டுக்கு வந்தபோது நான் அவரிடம் கட்டிப்பிடிக்க அனுமதி கேட்டு நன்கு கட்டிபிடித்துக் கொண்டேன் என கூறியுள்ளார். மேலும் சிவராஜ் குமார் தான் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதையும் உறுதி செய்துள்ளார்.

 

இதையும் படிங்க: வருங்கால காதல் கணவருடன் குஷியாக ஆட்டம் போட்ட நடிகை அபிநயா.! கண்ணுப்பட வைக்கும் கியூட் புகைப்படங்கள்!!