சினிமா

அடேங்கப்பா.. செம கெத்தான புகைப்படத்தை வெளியிட்டு, பிக்பாஸ் அர்ச்சனா என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா

Summary:

தொகுப்பாளினி அர்ச்சனா பிக்பாஸ் கிராண்ட் பினாலேவில் எடுக்கப்பட்ட கெத்தான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நாளுக்கு நாள் சுவாரசியங்களுடன் சென்ற நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது.அதில் அதிக வாக்குகளைப் பெற்று ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரை தொடர்ந்து பாலா 2-வது இடத்தையும், ரியோ மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தொகுப்பாளினி அர்ச்சனா. அவர் பிக்பாஸ் வீட்டில் அன்பு கேங் என்ற ஒன்றை உருவாக்கி ஆதிக்கம் செலுத்தி வந்தார். அதனால் அவர் ரசிகர்களின் விமர்சனங்களையும் பெற்றார்.

இந்த நிலையில் அர்ச்சனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் நடனமாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, மக்கள் உங்களைத் திணறடிக்க முயற்சிப்பார்கள்,  உங்கள் சிறகுகளை முடக்க முயற்சிப்பார்கள், ஆனால் நீங்கள் உயர்ந்த மற்றும் வலிமையான இடத்தில் சேர வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதனை எதுவும் தடுக்க முடியாது  என பதிவிட்டுள்ளார். அதற்கு பலர் ஆதரவாகவும் சிலர் எதிர்மறையாக விமர்சனம் செய்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement