கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
"மகன் கேட்ட கேள்வி! அந்தப் படத்தில் நடித்தது நினைத்து வெட்கப்படுகிறேன்!" நடிகை அர்ச்சனா வேதனை!

தமிழ் சினிமாவிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருபவர் அர்ச்சனா மாரியப்பன். தொலைக்காட்சித் தொடர்களில் குடும்பக் குத்துவிளக்காக இழுத்துப் போர்த்திக்கொண்டு நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக வலம்வருகிறார்.
அர்ச்சனா மாரியப்பன் சிம்பு நடித்து வெளியான "வாலு" படத்தில் ஒரு கவுன்சிலரின் மனைவியாக நடித்திருந்தார். அதன் மூலம் பிரபலமான இவர் தொடர்ந்து நாடோடிகள், வெள்ளைக்கார துரை, முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு இவர் அளித்த பேட்டியில், "மணமகன் தேவை என்ற படத்தில் நடித்திருந்தேன். அந்தப் படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது வேறு மாதிரி இருந்தது. ஆனால் படம் எடுத்தது, என் கதாப்பாத்திரம் அனைத்தும் வேறு மாதிரி இருந்தது.
இதுகுறித்து புகார் கொடுத்தபோது, இதைப் பெரிதுபடுத்தினால், நீங்களே படத்திற்கு விளம்பரம் தேடித் தருவது போல் ஆகிவிடும். எனவே கண்டுகொள்ளாமல் விடுங்கள் என்று கூறினர். இந்தப் படத்தின் போஸ்டரை பார்த்த ஏன் மகன் 'அம்மா இது நீதானே?' என்று கேட்டபோது இந்தப் படத்தில் நடித்ததை நினைத்து வெட்கப்பட்டேன்" என்று கூறியுள்ளார்.