
Aranmanai kili monisha affected by corono
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் அரண்மனைக்கிளி. இதில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் மோனிஷா. கொரொனோ அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட்ட நிலையில் அரண்மனைக்கிளி சீரியலும் நிறுத்தப்பட்டது.
பின்னர் ஊரடங்கு தளர்த்திய பிறகும் அந்த சீரியல் ஒளிபரப்பாகவில்லை. இந்நிலையில் மோனிஷா தற்போது மலையாளத்தில் ஒரு தொடரில் நடித்து வருகிறார். மேலும் அதற்கான படப்பிடிப்புக்கு சென்று வந்த நிலையில், மோனிஷாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
மேலும் அந்த படப்பிடிப்பில் இருந்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement