சினிமா

இந்த மழலைக்குள் இப்படியொரு திறமையா! ஆஸ்கார் நாயகனையே அசர வச்சுட்டாரே!! வைரலாகும் கியூட் வீடியோ!!

Summary:

சின்ன குழந்தை ஒன்று மழலை மாறாத குரலால் ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை&rsqu

சின்ன குழந்தை ஒன்று மழலை மாறாத குரலால் ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’  பாடலை அழகாக பாடிய வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் செம ஹிட்டானது. அதனை தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழிளிலும், ஏராளமான டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

மேலும் அவர் தற்போது இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் ஆஸ்கார் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில் மழலை மாறாத குழந்தை ஒன்று ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலை ஹிந்தி மற்றும் தமிழில் அழகாக பாடியுள்ளது. அந்த வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  இந்நிலையில் அந்த வீடியோ தற்போது பெருமளவில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
    


Advertisement