முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முன்னணி நடிகருடன் முதல் முறையாக கூட்டணி! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

முருகதாஸின் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முன்னணி நடிகருடன் முதல் முறையாக கூட்டணி!

இந்திய அளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் AR முருகதாஸ். தீனா, ரமணா, கஜினி போன்ற பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்தவர் இயக்குனர் AR முருகதாஸ். அதன்பின்னர் AR முருகதாஸ் படம் என்றாலே ரசிகர்கள் உற்சாகமாகிவிடுவார்கள்.

பல்வேறு வெற்றிப்படங்களை தொடர்ந்து சமீபத்தில் இவர் இயக்கிய துப்பாக்கி, கத்தி போன்ற படங்களும் மாபெரும் வெற்றிபெற்றது. தமிழ் மட்டும் இல்லாது ஹிந்தி, தெலுங்கு படங்ளையும் இயக்கிவரும் முருகதாஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்து தர்பார் படத்தை இயக்கிவருகிறார்.

இந்நிலையில் தர்பார் படத்திற்கு பிறகு முருகதாஸ் யாரை வைத்து இயக்க போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க போவதாக கூறப்படுகிறது. தற்போதுவரை உறுதியாகாத இந்த தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo