முதன்முறையாக வெளியான ஏ.ஆர்.முருகதாஸின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம்!

முதன்முறையாக வெளியான ஏ.ஆர்.முருகதாஸின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படம்!


AR murugadhass family photo

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் முருகதாஸ். பிரபல இயக்குனர் என்ற பெயரை தாண்டி சர்ச்சை இயக்குனர் என்ற அளவிற்கு அவர் மீது அடுத்தடுத்து சர்ச்சைகள் குவிந்தன. கத்தி படம் வேறொருவரின் கதை என்றும், ஸ்ரீ ரெட்டி கூறிய பாலியல் புகார், சர்க்கார் படத்தில் சர்ச்சை என அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கினார் முருகதாஸ்.

ஒருவேளையாக சர்க்கார் படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ். அந்த படத்தின் பெயரும் நாற்காலி என கூறப்பட்டு வந்ததால் அதுவும் சர்ச்சைக்குரிய படமாக அமையுமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் பிறந்த ஏ.ஆர்.முருக தாஸ் அதே ஊரை சார்ந்த ரம்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 

பொதுவாக சினிமா பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து கொள்வது இல்லை. ஆனால் முருகதாஸ் சற்று வித்யாசமனவராக இருக்கிறார். அவருடைய குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

AR Murugadass