சினிமா

அஜித் அதை செய்தால் விரைவில் அவரை இயக்க தயார்! முருகதாஸ் அதிரடி!

Summary:

AR Murugadhas directing thala ajith in his new movie

தமிழில் வெளியான தீனா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. கேங்ஸ்டர், குடும்ப பாசம், தங்கை பாசம் என பலவிதமான கருத்துக்களை காந்த இந்த படம் இயக்குனர் முருகதாஸ் மற்றும் தல அஜித் இருவரது வாழ்விலும் மிகவும் முக்கியமான படம். அஜித்தை அனைவரும் தல என அழைக்க ஆரம்பித்தது தீனா படத்திற்கு பிறகுதான்.

ஆனால் எதிர்பாராத விதமாக தீனா படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணையவில்லை. அதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகிறது. இயக்குனர் முருகதாஸ் மிரட்டல் என்னும் கதையில் அஜித்தை நடிக்க அழைத்ததாகவும், ஆனால் அஜித் முருகதாஸிடம் கொஞ்சம் பொறுங்கள் என்று சொன்னதாகவும் அதன்பிறகு அதே கதையை கஜினி என்ற பெயரில் நடிகர் சூர்யாவை வைத்து படம் எடுத்ததால் முருகதாஸ் மீது அஜித் கோவத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் தல அஜித்துடன் நிச்சயம் விரைவில் படம் பண்ணுவேன், ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து கொடுப்பேன் என கூறியுள்ளார் முருகதாஸ்.

தீனா படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்துடன் எப்போது இணைவீர்கள்? என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் தற்போது முருகதாஸ் அளித்த பேட்டியில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அஜித்துக்கும் எனக்கும் இடையே கேப் அதிகம் விழுந்து விட்டது. என்னுடைய நலம் விரும்பிய பலரும் அஜித்துடன் எப்போது படம் பண்ண போகிறீர்கள் என கேட்கிறார்கள்.

நானும் யார் மூலமாவதோ அல்லது அஜித் மூலமாகவோ வாய்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன். அப்படி வந்தால் நிச்சயம் அஜித்துடன் இணைவேன். ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து கொடுப்பேன் என கூறியுள்ளார்.

முருகதாஸின் இந்த பேச்சு அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிர்கர்கள் பலரும் அந்த நாளுக்காக தான் நாங்களும் காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறி வருகின்றனர்.


Advertisement