நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்த விராட் மனைவி அனுஷ்கா சர்மா.! வைரலாகும் புகைப்படம்.!

நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்த விராட் மனைவி அனுஷ்கா சர்மா.! வைரலாகும் புகைப்படம்.!


anushka sharma shared her photo


பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்க உள்ளது. விராட் கோலியும் அவரது மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவும் அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்.

இந்தநிலையில், 2020-ம் ஆண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட டுவீட்களில்விராட் கோலி பதிவிட்ட அனுஷ்கா ஷர்மா கர்பமான செய்திதான் என ட்விட்டர் அறிவித்தது. அந்த அளவிற்கு அனுஷ்கா ஷர்மாவிற்கும் விராட் கோலிக்கும் குழந்தை பிறக்கும் செய்தி சினிமா ரசிகர்களுக்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது.


இந்தநிலையில் விரைவில் அம்மாவாகப்போகும் அனுஷ்கா ஷர்மா, பிரபல நாளிதழான வோக் நாளிதழின் அட்டைப் படத்துக்கு நிறைமாத கர்ப்பிணி வயிற்றோடு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. வோக் இதழுடன் மகிழ்ச்சியான தருணம் என்று எழுதியுள்ளார். அதோடு அந்த அட்டை படத்திலும் அனுஷ்கா ஷர்மாவின் புதிய தொடக்கம் என குறிப்பிட்டுள்ளனர்.