அழகு தேவதை நடிகை அனுஷ்காவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா! அழகான குடும்பல!!

அழகு தேவதை நடிகை அனுஷ்காவின் அம்மா, அப்பாவை பார்த்துருக்கீங்களா! அழகான குடும்பல!!


anushka-mother-annd-father-photo-viral-4s2raj

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரெண்டு படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனைத் தொடர்ந்து அவர் வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத் திருமகள், தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், லிங்கா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம்வந்த அவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். நடிகை அனுஷ்காவிற்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து அனுஷ்கா நடித்திருந்த பாகுபலி-2 திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.

இதற்கிடையில் உடல் எடை அதிகரித்த அனுஷ்கா யோகா, ஆயுர்வேத சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்தார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் பிசியாக இருக்கும் நடிகை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நாள் கொண்டாடும் தனது பெற்றோருக்கு வாழ்த்து கூறி அவர்களது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.