
அஞ்சலி anushka
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, அஜித், ரஜினி, விக்ரம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் முதன் முதலில் 2006ல் "ரெண்டு" எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். மேலும் இவர் கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
துவக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் மிகப்பெறிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.
அதன் பின் இவரது திரை வாழ்கை முற்றிலும் மாறியது, மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து, அதற்காக முழு சிரமத்தை எடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். அதற்கு பல பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.
இந்நிலையில் நடிகை அஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை அனுஷ்கா நடிகை அஞ்சலியை தூக்கி போஸ் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்திற்கு பக்கத்தில் டேபிளில் மது கிளாஸ் இருப்பதால் நன்கு குடித்து விட்டு தான் பிறந்த நாள் கொண்டாடியதாக தெரிகிறது.
Advertisement
Advertisement