அட என்னம்மா இது.. சின்னப்பிள்ளை போல! அசத்தலான புதிய முயற்சி! கொடிபட வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா!

அட என்னம்மா இது.. சின்னப்பிள்ளை போல! அசத்தலான புதிய முயற்சி! கொடிபட வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா!


anupama parameswaran learn telungu

மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் பிரேமம். இப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கொடி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். 

பின்னர் அவர் தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளிப்போகாதே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து ரிலீசாக உள்ளது. மேலும் அனுபமா சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது தெலுங்கு கற்று வருகிறார்.

அவர் பள்ளியில் படிக்கும் சிறுபிள்ளைகள் போல ஹோம்ஒர்க் புத்தகம் வைத்து எழுதி கற்றுக் கொள்கிறார். இவருக்கு ஏற்கனவே ஓரளவிற்கு தெலுங்கு பேசத் தெரியும் என்றாலும் எழுதத் தெரியாத காரணத்தினால் தற்போது ஆரம்பப் புத்தகத்தை வைத்து ஒவ்வொன்றாக கற்றுக் கொண்டு வருகிறார். இத்தகைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அனுபமா, புதிய லட்சியம். 'அ'வுடன்  ஆரம்பிக்கிறேன் என உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.