சினிமா

சோ க்யூட்! கொடி பட நடிகை சிறுவயதில் இம்புட்டு அழகா இருந்துள்ளாரா! தீயாய் பரவும் புகைப்படம்.

Summary:

Anupama childhood photo

அனுபமா பரமேஸ்வரன் கேரளாவை பூர்வேகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

ஆனால் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானார். தற்போது தெலுங்கு சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் ரசிகர்களை கவருவதற்காக சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவரின் சிறுவயது புகைப்படங்களின் தொகுப்பு தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் இவர் சிறுவயதில் என்ன ஒரு அழகு என கூறி வருகின்றனர்.

View this post on Instagram

Actress ##anupamaparameswaran Childhood Pics

A post shared by Behind Talkies (@behindtalkies) on


Advertisement