திடீரென நிறுத்தப்பட்ட அண்ணாத்த படத்தின் சூட்டிங்! ஏன்,என்னாச்சு? வெளியான அதிர்ச்சி காரணம்!!annaatthe movie shooting stopped temporarily

தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,  கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது. மேலும் இதன் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளனர். இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

annaatthe

மேலும் அண்ணாத்த படப்பிடிப்பை விரைவில் முடிக்க வேண்டுமென படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அங்கு பணியாற்றிய 8 பேருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அண்ணாத்த படபிடிப்பு தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.