சினிமா

அஞ்சலி படத்தில் அஞ்சலி பாப்பாவாக நடித்த ஷாமிலி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Summary:

anjali movie shamili current status and photos

இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அஞ்சலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாமிலி, இவர் இப்படத்திற்காக தேசிய விருதும் பெற்றார். இவர் நம்ம தல அஜித்தின் மனைவி ஷாலினியின் சொந்த தங்கை ஆவார். இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

ஷாமிலி 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். அஞ்சலி படத்தில் நடிப்பதற்கு முன்பே தமிழ் சினிமாவில் ராஜநடை என்ற படத்தில் நடித்துள்ளார். மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஷாமிலி. பின்னர் கதாநாயகியாக தனது வாழக்கையை ஆரம்பித்த இவர்க்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

நீண்ட நாட்கள் கழித்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்தப்படமும் சரியாக ஓடாததால் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார் இந்த அஞ்சலி பேபி.


Advertisement