அஞ்சலி படத்தில் குட்டி குழந்தையாக நடித்த மூவரும் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.! வைரல் புகைப்படம்.anjali-movie-little-kids-all-grown-up-and-latest-photos

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் அஞ்சலி. படம் வெளியாகி ஏறக்குறைய 30 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்று வரை இந்த படம் மக்கள் மத்தியில் பிரபலமான படங்களில் ஓன்று.

மனநலம் குன்றிய குழந்தையின் வாழ்க்கையை மய்யமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த படத்தில் மனநலம் குன்றிய அஞ்சலி பாப்பாவாக நடிகை ஷாமிலி நடித்திருப்பார். அவருக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் தருண், அஞ்சலிக்கு அக்காவாக ஸ்ருதி ஆகியோர் நத்திருந்தனர். இவர்கள் அனைவரும் அந்த படத்தில் குழந்தையாக நடித்தநிலையில், 30 வருடங்களுக்கு பிறகு அவர்கள் தற்போது எப்படி உள்ளார்கள் என்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

1 . தருண்:


anjali movie

2. ஸ்ருதி 

anjali movie

3. அஞ்சலி - ஷாமிலி

anjali movie

தருண் மற்றும் ஷாமிலி இருவரும் சினிமா துரையிலையே நீடித்துவரும் நிலையில், ஸ்ருதி சினிமாவில் இருந்து விலகி சாதனை பெண்ணாக வளம் வருகிறார். பேபி ஸ்ருதி வளர்ந்தபின் லண்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளார், மேலும் லண்டனில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆசிய மகளிர் சாதனையாளர் விருதுகள் 2019 இல் அந்த ஆண்டின் இளம் சாதனையாளர் விருது பெற்றுள்ளார் ஸ்ருதி.