சினிமா

இன்னும் குழந்தைன்னு நெனப்பு! யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அஞ்சலி- கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.

Summary:

Anjali latest photo

தமிழ் சினிமாவில் நடிகர் ஜிவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அதனை தொடர்ந்து அவர் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் அளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் ஜெய்யுடன் இணைந்து அவர் நடித்த எங்கேயும் எப்போதும் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. 

அதனை தொடர்ந்து ஜெய்யும், நடிகை அஞ்சலியும் காதலிப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் அஞ்சலி தற்போது விஜய்சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற திரைப்படத்திலும், நாடோடிகள் 2 படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு என்னுடைய சண்டே இப்படி தான் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகை அஞ்சலியா இது என புகைப்படத்தை திருப்பி பார்த்து வருகின்றனர். 


Advertisement