சினிமா

முதன் முறையாக வெளியான அஜித் மகள் அனிகாவின் சகோதரி புகைப்படம்! இதோ.

Summary:

Anika sister photo

தமிழில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்தப் படத்தில் அஜித்க்கு மகளாக நடித்துள்ளார். ஆனால் இவர் இதற்கு முன்பு 10 க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 

இதையடுத்து அனிகா மீண்டும் இயக்குனர் சிவா இயக்கத்தில் விஸ்வாசம்  படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. 

அதுமட்டுமின்றி நடிகர் அஜித்தின் 60 வது படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக அனிகா மற்றும் அவரின் சகோதரியின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் தூக்குதுரை உனக்கு இன்னொரு மகள் இருக்கிறாரா என கேட்டு கமெண்ட் செய்துள்ளனர். 

 


Advertisement