சினிமா

ஸ்பெஷல் டே! வெள்ளை நிற மாடர்ன் உடையில் தேவதையாய் ஜொலிக்கும் குட்டி நயன்! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!

Summary:

ஸ்பெஷல் டே! வெள்ளை நிற மாடர்ன் உடையில் தேவதையாய் ஜொலிக்கும் குட்டி நயன்! வைரலாகும் புகைப்படங்கள்!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது  பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் அனிகா. இவர் தமிழில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து அவர் நானும் ரவுடி தான், மிருதன் என பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அனிகா விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானார். இவர் மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பார்.

இந்நிலையில் அனிகா அண்மையில் தனது 17வது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அப்பொழுது அவர் வெள்ளை நிற உடையில் தேவதையாக ஜொலித்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement