"குட் நைட் அனு மாதிரி பொண்ணு வேணுமா, எல்லாருமே கேடி பசங்களா தான் இருக்காங்க" அனிதா சம்பத் வைரலாகும் பதிவு.?

"குட் நைட் அனு மாதிரி பொண்ணு வேணுமா, எல்லாருமே கேடி பசங்களா தான் இருக்காங்க" அனிதா சம்பத் வைரலாகும் பதிவு.?



anidha-sampath-posted-about-good-night-anu-character

சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும்போதே இணையத்தில் இவர் புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்கள் இவரது அழகை பாராட்டி வந்தனர்.

anitha

இதன் பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தனது வாழ்க்கையில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்த அனிதா சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறிய பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது பிசினஸ் செய்து வரும் அனிதா சம்பத் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவான நபராக இருந்து வருகிறார்.

anitha

சமீபத்தில் வெளியான 'குட் நைட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த அனு கதாபாத்திரம் போன்ற மனைவி வேண்டும் என்று நெட்டிசன்கள் பல பதிவுகளை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து அனிதா சம்பத் "குட் நைட் அனு மாதிரி மனைவி வேண்டும் என்று கேட்பவர்கள் எல்லாருமே கேடி பசங்க தான். விருப்பத்தை சொல்லாம நாம சொல்றதை மட்டும் மூடிட்டு கேக்கணும்னு சொல்லாமல் ஷாட்டா அந்த மாதிரி வேணும்னு கேக்குறாங்க. பொண்ணுங்க நமக்கு புடிச்சத தான் பண்ணனும். இவங்க பேச்சு எல்லாம் கேட்கக்கூடாது". இப்படி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.