சினிமா

தன்னை ஏமாற்றி உடலளவில் சீரழித்த நபர் இவர்தான்.! ரகசியத்தை அம்பலப்படுத்தும் ஆண்ட்ரியா!! பரபரப்பில் ரசிகர்கள்!!

Summary:

Andrea says the name of cheating person

தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. அதனை தொடர்ந்து அவர் ஆயிரத்தில் ஒருவன்,  மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, வடசென்னை என பல வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.  மேலும் இவர் சிறந்த நடிகை மட்டுமின்றி புகழ்பெற்ற பாடகியும் கூட. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏராளமான ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார்.  

 இந்நிலையில் கடந்த சில காலங்களுக்கு முன்பு நடிகை ஆண்ட்ரியா தான் திருமணமான ஒரு நபருடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும், அவர் உடலளவில் என்னை மிகவும் காயப்படுத்தி இருந்ததாகவும் கூறியிருந்தார். மேலும் இதனால் பெரும் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருந்த அவர் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்ததாகவும் கூறி இருந்தார். 

 இந்நிலையில் ஆண்ட்ரியா அந்த நபர் குறித்த தகவல்களை வைத்து தான் முறிந்த சிறகுகள் என்ற கவிதை நூலை எழுதியதாக கூறியிருந்தார். இந்நிலையில் தான் எழுதிய அந்தப் புத்தகத்தை நேற்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிடுவதாகவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று அந்த புத்தகத்தை வெளியிடவில்லை. 
 
இந்நிலையில் ரசிகர்கள் இன்றாவது ஆண்ட்ரியா அந்த புத்தகத்தை வெளியிடுவாரா?  அவரை ஏமாற்றிய அந்த பிரபலம் யார் என ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர். 


Advertisement