ப்ளீஸ் இதை செய்யுங்க! கொரோனாவிலிருந்து மீண்ட ஆண்ட்ரியா கொடுத்த 10 அசத்தலான டிப்ஸ்! என்ன பார்த்தீர்களா!!

ப்ளீஸ் இதை செய்யுங்க! கொரோனாவிலிருந்து மீண்ட ஆண்ட்ரியா கொடுத்த 10 அசத்தலான டிப்ஸ்! என்ன பார்த்தீர்களா!!



andrea-10-tips-for-recover-from-corono

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் நாளுக்குநாள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இத்தகைய கொடூர தொற்றுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் இளம் வயதினர் முதல் ஏராளமானோர் உயிரிழக்கும் அவலமும் நேர்ந்து வருகிறது. இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டுள்ளார். இந்தநிலையில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் பின்பற்றுங்கள் என பத்து ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.

 1.கொரோனா பாசிடிவ் என்று வந்தாலும் நீங்கள் பாசிட்டிவாக இருங்கள். பயம் வந்தால் அனைத்தையும் மோசமாக்கும். எனவே கொரோனாவிலிருந்து மீண்டு வருவதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
2.கொரோனா மூக்கு, தொண்டை, இறுதியாக நுரையீரல் என சுவாசப்பாதையை தாக்குகிறது. எனவே சுவாசப்பாதையை தொற்றில் இருந்து காக்க என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்யுங்கள். ஆவி பிடிப்பது, சுவாசப்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.


3 . நாம் நல்ல உணவுகளை சாப்பிடுவதும், குடிப்பதும் மிக முக்கியம். மிளகு ரசம், இஞ்சி டீ, மஞ்சள் கலந்த பால், சூப் போன்றவற்றை குடிக்கலாம். அடிக்கடி ஜூஸ், தண்ணீர் குடிக்க வேண்டும். சளி பிடிக்கக் கூடிய உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.


4. உங்கள் வீட்டு பால்கனி, மொட்டை மாடி அல்லது ஜன்னலை திறந்துவிட்டு நல்ல காற்றை சுவாசியுங்கள்.


5. எதிர்ப்பு சக்தியைத் தூண்டக் கூடிய விட்டமின் சி, பி,ஜின்க் போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம். அஸ்வகந்தா, துளசி போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி  அதனைப் பின்பற்றலாம்.

Andrea
6. நம் குடும்பத்தினர் பாதுகாப்பு மட்டுமில்லாமல் காவலர்கள், பணியாளர்கள் என நம்மை சுற்றி இருப்பவர்களையும் நாம் பாதுகாக்க வேண்டும்.


7. தனிமையில் இருக்கும்பொழுது பெருமளவில் உணர்ச்சிவசப்படுவோம். அப்போது நமக்கு மருத்துவ ஆலோசனைகள் தேவை. 


8. நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளது தெரிந்ததுமே காலதாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகவும். மருத்­துவ உத­வி கிடைக்­கும்­வரை ஆக்ஸிஜன் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள குப்புறபடுத்துக் கொள்ளுதல் போன்ற செயல்கள் உதவும்.


9.நெகடிவ்வான செய்திகளைப் பார்ப்பது, கொரோனா நிலவரம் ஆகியவை அழுத்தத்தை ஏற்படுத்தும். அதுவே எதிர்ப்புக் சக்தியைக் குறைக்கும். எனவே புத்தகம் படியுங்கள்,பாட்டு கேளுங்கள், உங்கள் குடும்பத்தினர் நண்பர்களுடன் பேசுங்கள்.


10.கொரோனா சர்வதேச பெருந்தொற்று . உங்களுக்கு வந்தால் அது உங்கள் தவறல்ல. இதற்கு குற்ற விசாரணைகள் தேவையில்லை. அனைவர் மீதும் கருணையோடு இருங்கள். நாம் எல்லோரும் இணைந்து போராடுவோம். என தெரிவித்துள்ளார்.