பார்ரா.. சாலையில் நாட்டு நாட்டு பாடலுக்கு செம ஆட்டம் போட்ட அமெரிக்க போலீசார்.! தீயாய் பரவும் வீடியோ!!america-police-dance-to-nattu-nattu-song

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் கடந்த மாா்ச் மாதம் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படம் ஆா்ஆா்ஆா். தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளிவந்த இதில் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் ஆகியோர் நடித்திருந்தனர். ஆர்ஆர்ஆர் படம் உலகளவில் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு  பாடல் செம ஹிட்டானது. எம்.எம். கீரவாணி இசையமைப்பில் ராகுல் மற்றும் கால பைரவா இந்த பாடலை பாடியுள்ளனர். மேலும் இதில் தோள் மீது கை போட்டுகொண்டு ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரண் போட்ட ஆட்டம் அனைவரையும் கவர்ந்து துள்ளலாட்டம் போடவைத்தது.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கபட்டது. இதற்கிடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு சாலையில் அமெரிக்க காவல் துறையினர் நாடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.