உண்மையிலேயே பேரழகிதான்.. கொலை செய்யப்பட்ட பிக்பாஸ் அமீரின் அம்மா இவங்கதானா! வைரலாகும் புகைப்படம்!!

உண்மையிலேயே பேரழகிதான்.. கொலை செய்யப்பட்ட பிக்பாஸ் அமீரின் அம்மா இவங்கதானா! வைரலாகும் புகைப்படம்!!


ameer-mother-photo-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5. இதில் வைல்ட் கார்டு என்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து ஒவ்வொரு டாஸ்க்குகளையும் திறம்பட விளையாடி வருபவர் அமீர். அவர் நேற்றைய எபிசோடில் தனது வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து கண்கலங்க பேசியிருந்தார்.

அதாவது சிறுவயதில் இருந்தே அப்பாவை பார்த்திராத அமீர் ஊட்டியில் தனது அம்மா மற்றும் அண்ணனுடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் அண்ணனின் நடவடிக்கைகள் பிடிக்காத நிலையில் அமீர் மற்றும் அவரது அம்மா மட்டும் கோயம்புத்தூரில் குடியேறியுள்ளனர். அவர்கள் மண் வீடு, ஒருவேளை சாப்பாடு என ஏழ்மையின் பிடியில் வசித்து வந்தநிலையில், திடீரென அமீரின் அம்மா கொலை செய்யப்பட்டுள்ளார்.

bigboss

விவரம் தெரியாத சிறு வயதிலேயே அம்மா கொலை செய்யப்பட்டு, ரத்தவெள்ளத்தில் எறும்பு மொய்க்க கிடந்ததை கண்டு அமீர் கதறியுள்ளார். அமீருக்கு ராணுவத்தில் சேர ஆசையாம். ஆனால் அவரது அம்மாவிற்கு இவர் பெரிய டான்சர் ஆகவேண்டும் என்பது கனவாம். அம்மா இறப்பிற்கு பின் யாருடைய ஆதரவும் இல்லாமல் பல கஷ்டங்களை அனுபவித்த அமீர் பின்னர் சில நல்ல உள்ளங்களின் உதவியோடு பல டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்று தற்போது இந்த நல்ல நிலைமைக்கு வந்துள்ளாராம்.

அவரது கதையை கேட்ட போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்கலங்கியுள்ளனர். மேலும் அமீர் தனது அம்மா மிகவும் அழகாக இருப்பார் என கூறியிருந்தார். இந்த நிலையில் அமீரின் அம்மா இவர்தான் என புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதனை கண்ட நெட்டிசன்கள் உண்மையிலே பேரழகிதான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.