லிப்கிஸ், டான்ஸ்.. பிறந்தநாளில் செம குட் நியூஸ் சொன்ன நடிகை அமலா பால்.! என்னனு பார்த்தீங்களா!! வைரல் வீடியோ!!

லிப்கிஸ், டான்ஸ்.. பிறந்தநாளில் செம குட் நியூஸ் சொன்ன நடிகை அமலா பால்.! என்னனு பார்த்தீங்களா!! வைரல் வீடியோ!!


amalapaul-announcedabout-her-wedding

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். தனது முதல் படத்திலேயே ஏராளமான சர்ச்சைகளை சந்தித்த அவர் பின்னர் மைனா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அமலா பாலுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தநிலையில் அவர் தெய்வ திருமகள், வேட்டை, தலைவா என பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ஒரு சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்கு பிறகு நடிகை அமலாபால் தாறுமாறாக கிளாமரில் இறங்கியுள்ளார்.

இதக்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை,ஊர் சுற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.இந்நிலையில் இன்று அமலாபால் தனது 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அவரது நண்பர் ஜகத் தேசாய் சர்ப்ரைஸ் கொடுத்து, நடனமாடி ப்ரபோஸ் செய்துள்ளார். 

அதனை அமலா பால் ஏற்றுக் கொண்டு அவருக்கு லிப்கிஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்த வீடியோவை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் எப்பொழுது திருமணம் என கேட்டு வருகின்றனர்.