Eeramaana Rojaavey 2: விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் நேரம் மாற்றம் - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
மருத்துவமனையில் அமலாபால்; படப்பிடிப்பில் பலத்த அடி
மருத்துவமனையில் அமலாபால்; படப்பிடிப்பில் பலத்த அடி

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமான "அதோ அந்த பறவை போல" படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தால் அமலாபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறிமுக இயக்குனர் வினோத் இயக்கிவரும் படம் "அதோ அந்த பறவை போல". ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் நாயகியாக அமலா பால் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பில் சண்டைக்காட்சியில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தில் நடிகை அமலாபாலுக்கு கையில் பலத்த அடிபட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த படத்தில் அமலாபாலுக்கு ஏராளமான சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சண்டை காட்சிக்காக அமலாபால் கையை வேகமாக சுழற்றியபோது கைகளில் பலத்த அடிபட்டுள்ளது. மேலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அமலாபால் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார்.
ஆனால் அதன் பிறகு வலி அதிகமானதால் அமலா பால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .
மேலும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கையில் தசையில் அடிபட்டுள்ளதால் அமலாபால் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில் 90 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் நடிகை அமலா பாலுக்கு ஏற்பட்ட இந்த விபத்தால் அதோ அந்த பறவை போல படத்தின் படப்பிடிப்பு சிறிது காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.