நடிகை அமலாபாலுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! அவரே பதிவிட்ட ட்விட்டர் பதிவு!

நடிகை அமலாபாலுக்கு அடித்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்! அவரே பதிவிட்ட ட்விட்டர் பதிவு!



Amalapal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இவர் மைனா திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். மைனா திரைப்படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம்.

அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அமலாபால் சமீபத்தில் ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தார்.

amalapal

இந்நிலையில் தற்போது நடிகை அமலாபாலுக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 70களில் நடக்கும் சம்பவத்தை வைத்து தயாராக இருக்கும் வெப் சீரியஸில் தான் நடிகை அமலாபால் நடிக்க உள்ளார். தற்போது இதனை நடிகை அமலாபாலே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.