எத்தனை கோடி கொடுத்தாலும் நோ.! வந்த வாய்ப்பை உதறி தள்ளிய அல்லு அர்ஜூன்! இதுதான் காரணமா??

எத்தனை கோடி கொடுத்தாலும் நோ.! வந்த வாய்ப்பை உதறி தள்ளிய அல்லு அர்ஜூன்! இதுதான் காரணமா??


allu-arjun-refuse-ad-acting-chance

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் முன்னணி பிரபலங்களாக இருக்கும் பலரும் படங்களில் நடிப்பது மட்டுமின்றி, விளம்பரப் படங்களிலும் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனும் ஏராளமான விளம்பரங்களில் நடித்து வருகிறார்.

அல்லு அர்ஜுன் இறுதியாக புஷ்பா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று செம ஹிட்டானது. மேலும் பெரும் வசூல் சாதனையும் படைத்தது. அதனை தொடர்ந்து தற்போது பான் இந்தியா ஹீரோவாக மாறியுள்ள அல்லு அர்ஜுனை சிகரெட், பான் மசாலா தயாரிக்கும் நிறுவனம் ஒன்றின்  விளம்பரத்தில் நடிப்பதற்கு பிரபல நிறுவனம் அணுகியுள்ளது.

allu arjun

மேலும் அதற்காக 6 கோடி சம்பளம் தருவதற்கும் முன்வந்துள்ளனர். ஆனால் அல்லு அர்ஜுன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டாராம். அத்துடன் இது போன்ற விளம்பரங்களில் நடித்து தன்னுடைய ரசிகர்கள் உள்ளிட்ட பலரையும் தவறான பாதையில் இட்டுச்செல்ல  தான் விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளாராம். மேலும் படங்களில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடித்தாலும், உண்மையில் அவருக்கு அந்த மாதிரியான பழக்கம் எதுவும் இல்லை என கூறப்படுகிறது.