சன், விஜய், ஜீ, கலர்ஸ் டிவி பிரபலங்கள் ஒன்றாக.. அட யாரெல்லாம் இருக்காங்க பார்த்தீங்களா! அழகிய புகைப்படம் இதோ!!

தற்காலத்தில் சினிமாக்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சிறு


all-channel-serial-actress-joined-for-ad-shoot

தற்காலத்தில் சினிமாக்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல்களுக்கு அடிமையாக உள்ளனர். ஒரு எபிசோடுகளை கூட தவறவிடாமல் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு சேனலிலும் பல நடிகைகள் பிரபலமாக உள்ளனர். 

இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றுவரும் குடும்ப தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதில் பாசமிகு அண்ணியாக நடித்து பெருமளவில் பிரபலமானவர் சுஜிதா. அவரைப்போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டிஆர்பியில் முன்னணி வந்து பெருமை சேர்த்த செம்பருத்தி தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர் ஷபானா.

   ad shoot

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பூவேஉனக்காக தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ராதிகா.
மேலும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்  இதயத்தை திருடாதே என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டவர் பிந்து. அனைவரும் இணைந்து ஒன்றாக விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
  ad shoot