சினிமா

என்ன நான்சென்ஸ் இதெல்லாம்! தல அஜித் குறித்து தீயாய் பரவிய வதந்தி! பொங்கியெழுந்த பைக்ரேஸர் அலிஷா அப்துல்லா!

Summary:

Alisha abdulla tweet about ajith

இந்தியளவில் பிரபல பெண் பைக் ரேஸராக திகழ்ந்து வருபவர் அலிஷா அப்துல்லா. இவருக்கு பைக் மற்றும் கார் ரேஸ்களில் கலந்து கொள்ளும் நடிகர் அஜித்துடன் நல்ல நட்பு உள்ளது. மேலும் நடிகர் அஜித்துடன் அலிஷா அப்துல்லா எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வந்துள்ளது.

அலிஷா அப்துல்லா பைக் ரேஸ் மட்டுமின்றி தமிழில் அதர்வா நடிப்பில் வெளியான இருப்புக்குதிரை படத்திலும் நடித்துள்ளார். மேலும் விஜய் ஆண்டனியின் சைத்தான் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் தேசிய மனித உரிமை குற்ற மற்றும் ஊழல் தடுப்பு அமைப்பின் தமிழ்நாடு மாநில பெண்கள் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 

இதுகுறித்து அலிஷா இணையத்தில் அடையாள அட்டையுடன் பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் பதவி கிடைத்ததும் அலிஷா அப்துல்லா நேராக அஜித்தின் வீட்டிற்கு சென்று, இந்த பதவி கிடைக்க நீங்கள்தான் காரணம் என கூறி, அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதாக வதந்தி பரவியது. மேலும் இதுகுறித்து பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலானது.

 இதனை கண்ட அலிஷா அப்துல்லா கோபத்துடன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், இது போன்ற நான்சென்ஸை நான் பொறுத்து கொள்ள மாட்டேன். எப்படி அவர் இதுபோன்று பேசலாம். என்னைப் பற்றி வதந்தி பரப்பியது மட்டுமில்லாமல் அஜித் சார் போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்களின் பெயர்களையும் இவர் கெடுக்கிறார். இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என  தெரிவித்துள்ளார்.


Advertisement