சினிமா

120 கோடி சம்பளம்..! ரஜினி, விஜய்யை பின்னுக்கு தள்ளிய ஹீரோ..! இந்தியாவிலேயே முதலிடம்..!

Summary:

Akshay Kumar is expected to paid Rs 120 crore for his next movie

நடிகர் தனுஷ் அடுத்தாக பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். படத்தில் சாரா அலி கான் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் அக்ஷய்  குமார் இந்த படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக ரூபாய் 120 கோடி பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் 50 முதல் 100 கோடி வரை சம்பளம் வாங்கும் நிலையில் ஒரு படத்திற்கு 120 கோடி வாங்கி இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.

நடிகர் அக்ஷய் குமார் தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். எந்திரன் படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படிருந்தாலும், அக்ஷய் குமாரை பெரிய அளவில் படத்தில் பயன்படுத்தவில்லை என்றே கூறலாம்.

 


Advertisement