மை டியர் தல-யுடன் ஆக்சன் கிங் அர்ஜுன்: உற்சாகத்தில் தல ரசிகர்கள்.!ajithkumar-arjun-arav-night-out-in-azerbaijan

 

மகிழ் திருமேனி இயக்கத்தில் விஸ்வாசம், விவேகம் திரைப்படத்தை தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் - மகிழ் கூட்டணி மூன்றாவது முறையாக விடாமுயற்சி திரைப்படத்திற்காக ஒன்றிணைந்துள்ளது. 

அஜித் குமார், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, அர்ஜுன், அருண் விஜய் உட்பட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்து வழங்குகிறது. 

இப்படம் விவேகத்தை போல அஜர்பைஜான் நாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக படக்குழு சமீபத்தில் அஜர்பைஜான் சென்றிருந்தது. அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி இருந்தன. 

Ajithkumar

இந்நிலையில், நடிகர் அர்ஜுன், அஜித் குமார், ஆரவ் ஆகியோர் ஷூட்டிங்கை முடித்துவிட்டு உணவு சாப்பிட ஹோட்டலுக்கு சென்றபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

நடிகர் அஜித் - அர்ஜுன் ஆகியோர் இணைந்து மங்காத்தா படத்தில் சில நிமிட காட்சியில் தோன்றி இருந்தாலும், அக்காட்சிகள் பெரிய அளவிலான உச்சத்தை பெற்றது. இப்படத்தில் இருவரும் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.