வேற லெவல்.. மொட்டை மாடியில் தல தரிசனம்.! இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போன ரசிகர்கள்.! ட்ரெண்டாகும் வீடியோ!!

வேற லெவல்.. மொட்டை மாடியில் தல தரிசனம்.! இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடி போன ரசிகர்கள்.! ட்ரெண்டாகும் வீடியோ!!


ajith visit her fans in trichy video viral

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் அஜித்தின் படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் பிறந்தநாள் போன்றவற்றை ரசிகர்கள்  திருவிழா போல கோலாகலமாக கொண்டாடி தீர்ப்பர்.

நடிகர் அஜித் நடிப்பது மட்டுமின்றி கார் ரேஸ், ட்ரோன் வடிவமைப்பது, துப்பாக்கி சுடுதல் போன்றவற்றின் மீது அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகர் அஜித் இன்று மாநில அளவிலான  துப்பாக்கி சுடும் போட்டிக்காக திருச்சிக்கு சென்றுள்ளார்.

இந்த தகவல் காட்டுத்தீயாய் பரவிய நிலையில் அவரை காண அங்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே திரண்டுள்ளது. இந்த நிலையில் தனது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் நடிகர் அஜித் மொட்டை மாடிக்கு சென்று ரசிகர்களை நோக்கி கையசைத்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ட்ரெண்டாகி வருகிறது.