
ajith very rare photo viral
தமிழ்சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் இந்த வளர்ச்சியை அடைந்த இவருக்கென பிரபல நடிகர், நடிகையர்களே பெரும் ரசிகர்களாக உள்ளனர். மேலும் அவருடன் சேர்ந்து நடிக்கவும் பல நடிகைகளும் காத்திருக்கின்றனர்.
நடிகர் அஜித் மற்ற நடிகர்களை போல சினிமா துறையில் மட்டும் ஆர்வம் காட்டாமல் கார், பைக் ரேஸ், அறிவியல், விளையாட்டு என மிகவும் வித்தியாசமாக தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் இந்த வருடம் அஜித் நடித்த இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து அடுத்ததாக வலிமை படத்தில் நடிக்க தயாராகிவருகிறார்.இந்நிலையில் அஜித் என்ன செய்தாலும் அதனை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது தல அஜித் இளமை காலத்தில் படபிடிப்பு இடைவேளையின்போது கிரிக்கெட் விளையாடும் ஒரு அரிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதனை தல ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Very Rare Snap Of THALA #AJITH While Playing Cricket..! 🏏😎#Valimai pic.twitter.com/2yq9DLc1En
— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) November 18, 2019
Advertisement
Advertisement