அஜித்தின் வலிமை பட வில்லன் இவர்தானா! வெளியான புதிய தகவல்.

அஜித்தின் வலிமை பட வில்லன் இவர்தானா! வெளியான புதிய தகவல்.


Ajith valimai

ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வலிமை படத்தில் நடித்துவருகிறார் அஜித். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கி நடந்துவருகிறது.

இதுவரை இந்த படத்தில் யார் நாயகி, யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.ஆனால் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்ற தகவல் மட்டும் சமீபத்தில் வெளியானது. மேலும் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.

Ajith

மேலும் இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.இந்நிலையில் இப்படத்தின் வில்லன் பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தான் இப்படத்தின் வில்லனாக கமிட்டாகியுள்ளாராம்.