இனிமேல் அப்படிதான்...தனது செல்ல மகளுக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு.! கொண்டாடும் ரசிகர்கள்!!

இனிமேல் அப்படிதான்...தனது செல்ல மகளுக்காக அஜித் எடுத்த அதிரடி முடிவு.! கொண்டாடும் ரசிகர்கள்!!


ajith take acting decision for his daughter

பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து  முன்னணி நடிகராக உள்ளார். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.மேலும் இவருக்கு நடிகர், நடிகையர்கள் பெரும் ரசிகர்களாக உள்ளனர்.

 மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர். '

Ajith

கடந்த பொங்களன்று வெளியான விஸ்வாசம் படம் மாபெரும் வெற்றியை பெற்று பலரும் குடும்பத்தினருடன் சென்று பார்த்தனர். மேலும் இந்தப் படத்தில் அஜித்தின் கதாபாத்திரம் அவரது மகள் அனோஷ்காவிற்கு மிகவும் பிடித்திருந்ததாம். மேலும் நேர்கொண்ட பார்வை திரைப்படமும் பெண்கள் மத்தியில் அஜித்திற்கு மாபெரும் மரியாதையை பெற்றுத்தந்தது.

இந்நிலையில் தனது மகளுக்காக இனிமேல் தான் நடிக்கும் படங்களில் பெண்களுக்கு எதிராக ஒரு கேலி, கிண்டல் காட்சிகூட இருக்கக் கூடாது என அனைத்து இயக்குனரிடமும் கறாராக கூறியுள்ளாராம்.இதனால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.