சினிமா

உடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல, கிரீடம் லுக்கிற்கு வந்தார், இதோ புகைப்படம்!

Summary:

Ajith reduced weight and new look photos goes viral

தமிழ் சினிமாவின் தல என ரசிகர்களால் போற்றப்படுபவர் நடிகர் அஜித். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் தமிழ் சினிமாவில் உச்சம் தொட்டுள்ளார் நடிகர் அஜித். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மாபெரும் வெற்றி பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஹிந்தி ரிமேக் படமான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார் அஜித். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் படத்தில் உடல் எடையை அதிகரித்துள்ள அஜித் தனது அடுத்த படத்திற்காக மீண்டும் உடல் எடையை குறைத்துள்ளதாகவும், மீண்டும் பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளதாகவும் அவரது ரசிகர்கள் சில புகைப்படங்களை வைரலாகிவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.   


Advertisement