சினிமா

செம யங் ஸ்மார்ட் லுக்கில் கலக்கலாக வந்த தல அஜித்! அதுவும் யார் வீட்டு திருமணத்திற்கு தெரியுமா? வைரலாகும் வீடியோ!

Summary:

ajith participate in manager marriage function

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது பிறந்த நாள் மற்றும் படங்கள் வெளியாகும் நாட்களில் ரசிகர்கள் திருவிழா போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்தப் படத்தில் அஜீத் நீண்ட நாட்களுக்கு பிறகு போலீசாக நடித்து வருவதாகவும், ஏராளமான பைக் ஸ்டன்ட் காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் பல தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பின்போது அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தது.இதனால் அஜித் ரசிகர்கள் பெருமளவில் பரிதவித்துப் போனர்.

இந்நிலையில் நலமாக உள்ள அஜித் மிக செம ஸ்மார்ட் லுக்கில் சென்னை லீலா பேலஸில் நடைபெற்ற தனது மேனேஜர் சுரேஷ் சந்திராவின் தங்கை மகள் திருமணத்தில் மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டுள்ளார்.  மேலும் சினிமா துறையினர்  சார்பாக நடக்கும் பொது விழாக்கள் எதிலும் கலந்து கொள்ளாத அஜித் தனது உதவியாளரின் வீட்டு நிகழ்ச்சியில் வாசலில் நின்று தனது வீட்டு விழா போல அனைவரையும் வரவேற்றது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


Advertisement