திடீரென அஜித் சொன்ன கழுதை கதை! ஏன்? அப்படி என்னதான் சொல்லியிருக்காரு பார்த்தீங்களா!!

திடீரென அஜித் சொன்ன கழுதை கதை! ஏன்? அப்படி என்னதான் சொல்லியிருக்காரு பார்த்தீங்களா!!


ajith-manager-shares-donkey-memes

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் மோசமான விமர்சனங்கள் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் AK61 படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் எனக் கூறப்படுகிறது. நடிகர் அஜித்குமார் எந்த சமூக வலைதள பக்கத்திலும் கிடையாது.

அவர் கூற விரும்பும் கருத்துகள்,  அறிக்கை போன்றவற்றை மேலாளர் சுரேஷ் சந்திரா ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது, கழுதையுடன் ஒரு வயதான தம்பதி செல்வதும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் எழும் விமர்சனங்கள் குறித்தும் விளக்கும் மீம்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நாம் என்ன செய்தாலும் அதனை இந்த சமூகத்தினர் விமர்சனம் செய்துகொண்டே இருப்பர். அதனை கண்டு கொள்ளாமல் நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கும் அந்த குட்டி கதை, 
'யாருக்கு தேவைப்படுகிறதோ, அவர்களுக்காக. அன்புடன் அஜித்' என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.