துணிவு படத்திற்காக 25 கிலோ உடல் எடையை குறைத்தாரா அஜித்?.. விமர்சனம் செய்யும் விஜய் ரசிகர்கள்.!!

துணிவு படத்திற்காக 25 கிலோ உடல் எடையை குறைத்தாரா அஜித்?.. விமர்சனம் செய்யும் விஜய் ரசிகர்கள்.!!


ajith-kumar-thunivu-movie-weight-loss

 

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர்  இயக்குனர் ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் துணிவு என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்கூட இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. 

tamil cinema

அத்துடன் இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், துணிவு திரைப்பத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்தப்பட்டது. இதனால் நடிகர் அஜித்தும், மஞ்சுவாரியரும் பைக்ரேஸ் சென்று விட்டதை தொடர்ந்து, அவர்கள் இல்லாத காட்சிகளை படக்குழுவினர் படமெடுத்து வருகின்றனர்.

tamil cinema

இந்த நிலையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அஜித் இப்படத்திற்காக 25 கிலோ எடை குறைத்ததாகவும் தகவல்கள் பரவின. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் அஜித்தை விமர்சித்து வருகின்றனர்.