பூனையை மடியில் படுக்கவைத்து குழந்தை போல் கொஞ்சிய நடிகர் அஜித்! வைரலாகும் கியூட் வீடியோ...

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார் அஜித் குமார். திரையுலகத்தில் மட்டுமல்லாது, கார் ரேசிங் மற்றும் பைக் ரைடிங்கிலும் அவரது ஆர்வத்தை தொடர்ந்து காட்டி வருகிறார். பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற புது புது ரேஸ்களில் கலந்துகொண்டு பல வெற்றிகளையும் பெற்றுள்ளார். இந்த ஆண்டு இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது, திரையுலக நடவடிக்கைகளிலிருந்து சிறிது இடைவெளி எடுத்துள்ள அஜித், முழு நேரமும் தனது பைக் பயணங்களில் மூழ்கியுள்ளார். கடந்த ஜூன் 7ம் தேதி, அவர் ரோமேனியா மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளில் பைக் ரைடிங் செய்கிறார் என அவரது வீனஸ் மோட்டார் சைக்கிள் குழு அறிவித்தது.
இந்நிலையில், தற்போது அஜித் பூனை ஒன்றுடன் பேசும் வீடியோ இணையத்தில் பரவலாக வைரலாகிறது. அந்த வீடியோவில், அவர் பூனைக்கு "நீ இந்தியா வருகிறாயா? சென்னை வருகிறாயா? நான் உன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன்" என பேசி, நெகிழ வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கோலி சோடா படத்தில் ATM ஆக நடித்த நடிகையை நிபாகம் இருக்கா! அவரது வீடியோவை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்! வைரல் வீடியோ...
.
Ak’s new friend.
| #AKWorldRideformutualrespect | #Ak #Ajith #AjithKumar | #RIDEformutualrespect |#AjithKumarWorldTour | #AjithkumarRacing | pic.twitter.com/ydxi7EBOwm
— Ajith (@ajithFC) July 13, 2025
இதையும் படிங்க: கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?